Skip to content

திருவெறும்பூர் காவிரியில் குளித்த வாலிபர் மாயம்….தேடும் பணி தீவிரம்

திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு  காட்டூரை  சேர்ந்தவர் கனகராஜ் .இவர் திக கட்சியின் நிர்வாகி. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அதில் மூன்று மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் ஒரு மகன் மட்டுமே வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நிலையில் வெளிநாட்டில்வேலை பார்த்து வரும் மூன்று மகன்களில் ராஜராஜன் என்ற மகன் வீட்டிற்கு அண்மையில் வந்திருந்ததாகவும் இந்த நிலையில் தனது வீட்டின் அருகில் உள்ள நண்பனுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வேங்கூர் பூசத்துறை பகுதியில் குளிக்க சென்றதாகவும் அப்படி குளித்த பொழுது தண்ணீர் ஆழத்தில் ராஜராஜன் இறங்கியபோது மூழ்கி விட்டார்.  கனகராஜ் மற்றும் அவரது உறவினர்கள் ராஜராஜனின் உடலை தேடும்பணியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த தீயணைப்புத்துறையினர் இருட்டிவிட்ட காரணத்தினால் ராஜ ராஜனை உடலை காலையில் தேடி பார்க்கலாம் என கூறி சென்று விட்டனர்.

இதற்கிடையில் ராஜராஜன் தண்ணீரில் குளித்து போது மூழ்கிய இடம் திருவெறும்பூர் காவல்துறைக்கு உட்பட்டதா அல்லது தஞ்சை மாவட்டம் தோகூர் காவல் நிலைய எல்லைக்கு  உட்பட்டதா  என்பது குறிதூது திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  உட்பட்ட எல்லையா என்பது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!