Skip to content

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

வாலிபருக்கு அரிவாள் வெட்டு… 2 பேர் கைது..

ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 25. )இவர் கடந்த 24 ஆம் தேதி தன் வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார், அப்போது அங்கு மது போதையில் வந்த 2 பேர் கார்மேகத்தை அரிவாளைக் கொண்டு வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த கார்மேகம் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது 25 மற்றும் ராபர்ட் (வயது 48 )ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

சிகிச்சையில் இருந்த ஆண் மாயம்

திருச்சி துறையூர் ஆண்டாளம்மன் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47. ) மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் கடந்த 24ந் தேதி மன உளைச்சலில் இருந்த சிவக்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவருடன் அவரது மகள் இலக்கியா (வயது24) உடன் இருந்தார். இந்நிலையில் 24 தேதி சிவக்குமார் மருத்துவமனையில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது…  

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (52. ) கிராப்பட்டி பாலம் அருகே தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் எ.புதூர் போலீசார் வழக்குப்பதிந்து எடமலைப்பட்டிபுதூர், ஆர்.சி நகரை சேர்ந்த சையது அபுதாகிர் (வயது 28) என்பவரை கைது செய்தனர், அதோடு அவரிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

 

error: Content is protected !!