கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது.5 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 791 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. காளைகளை அடக்க 375 காளையர்கள் இதில் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், ஃபேன், கட்டில் குக்கர், தங்க காசு, கட்டில், பீரோ, சைக்கிள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் 25, பார்வையாளர்கள் 18, மாட்டின் உரிமையாளர்கள் 16 என 59 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்,
இரண்டாம் சுற்று நிறைவடையும் நிலையில் இருந்த போது சோர்வின் காரணமாக தடுப்பு வேலி கம்பி ஓரமாக அமர்ந்திருந்த மாடு பிடி வீரர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவகுமார் (வயது 21). என்ற இளைஞரை மாடு குத்தியதில் வலது கண் வெளியில் வந்தது உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிவக்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆர்டி