புதுக்கோட்டை காவேரி நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் அரவிந்த்(30)தனியார் பள்ளி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் பெரம்பலூரில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு அரவிந்த் பைக்கில் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது இன்னொரு டூவீலருடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரவிந்த் காயம் அடைந்தார்.
உடனடியாக அவர் பெரம்பலூர் ஆஸ்பத்திரியியில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அரவிந்த் பெரம்பலூரில் இருந்து புதுக்கோட்டை வந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்றார். நேற்று திடீரென அரவிந்த் இறந்தார். இதனால் அரவிந்த் குடும்பத்தினர் மருத்துவமனையில் டாக்டா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சரியாக கவனிக்கவில்லை. டாக்டர்கள் அலட்சியத்தால் என் மகன் உயிர் போய்விட்டது என்று குற்றம் சாட்டினர்.
இது குறித்து சத்தியமூர்த்தி கூறும்போது, என் மகன் நான்றாகத்தான் இருந்தான் டாக்டர்கள் சரியாக கவனிக்காததால் தான் அவன் இறந்தான். டாக்டர்கள் அலட்சியத்தால் என் மகன் இறந்து விட்டான். இது குறித்து அரசு விசாரிக்க வேண்டும்.என் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அரவிந்த் உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.