Skip to content
Home » கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்……டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால்…. வாலிபர் பலி….

கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்……டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால்…. வாலிபர் பலி….

  • by Senthil

சென்னை கிண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பாலாஜி என்பவரை நேற்று முன்தினம்,  விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நேற்று தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர்.  அவசர நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்போம் என்று டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் அதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

அதே கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்  பித்தப்பை கல் பிரச்னைக்காக  விக்னேஷ் (31)என்ற வாலிபர் குடல்நோய் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவருக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.  இதனால்  விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் தான் விக்னேஷ் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் கதறினர். தங்களுக்கு நியாயம் வேண்டும் என்றும் அவர்கள் மருத்துவமனை முன்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் டாக்டர் மீது கத்திக்குத்து என்ற செய்தி வெளியானதும்,  அரசுக்கு எதிராக இந்த பிரச்னையை பூதாகரமாக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் தமிழக கவர்னர் முதல் கடைசி அரசியல்வாதி வரை அறிக்கை விட்டனர். அதிமுக மாஜி அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்றனர்.  பிரேமலதா மருத்துவமனைக்கு போனார். அனைவரும் அரசை கண்டித்து அறிக்கை விட்டனர். ஆனால் இன்று ஒரு உயிர் போன நிலையிலும் ஊடகங்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.  அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.  சாமான்யனின் உயிர்  இவர்களுக்கு பெரிதாக தெரியவில்லையே என  இறந்து போன விக்னேசின் உறவினர்கள் கதறி அழுதனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!