திருச்சி , ஸ்ரீரங்கம், மேல உத்தரவீதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ஸ்ரீதேவி (53). இவர் நேற்று ஸ்ரீரங்கம் மண்டபம் சாலையில் உள்ள ஒட்டலில் சாப்பிட குடும்பத்துடன் டூவீலரில் சென்றார். அப்போது ஓட்டல் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு வண்டியின் முன்புறத்தில் உள்ள டேஸ்போர்டில் எதார்த்தமாக செல்போனை வைத்துவிட்டு ஒட்டலுக்குள் சென்று விட்டார். பிறகு குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்த பிறகு செல்போன் திருட்டு போனது தெரிந்தது. அதிர்ச்சியான அப்பெண் இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றிதிரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த சரவணன் (35) என்பதும், இவர் தான் ஸ்ரீதேவியின் செல்போனை திருடினார் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் சரவணனை கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.