கோவை மாவட்டம் ஆணைமலை பகுதியை சேர்ந்த மயில்சாமி மனைவி வசந்தி (60) இவர் தனது பேரனுடன் 13ஆம் தேதி சென்னைக்குச் சென்று மீண்டும் 15ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு செல்ல பயணம் செய்தார்.
அப்போது குடியாத்தம் ரயில் நிலையம் அருகே வந்த போது பொது நள்ளிரவு 12 மணியளவில் தனது பேரன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறியதால் கழிவறைக்குள்ளே அனுப்பிவிட்டு வெளியே நின்றிருந்த வசந்தியிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர் கழுத்தில் இருந்த ஆறு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.
இதன் காரணமாக வசந்தி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மூன்று தனி படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் சந்தேகிக்கும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பதும் வசந்தியின் 6சவரன் தங்க நகை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
எனவே திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.