குட்கா கடத்திய வாலிபர் கைது
திருச்சி மேல கொண்டையம் பேட்டை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 47). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக சப் இன்ஸ்பெக்டர் சட்டநாதன் விரைந்து சென்று அவரை கைது செய்து அவரிடம் இருந்து 900 எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றினார் .மேலும் அவரது மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
திருச்சி மல்லியம்பத்து செங்கதிர்சோலை குடி தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 61). இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணதாசன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஓடத்துறை பாலத்தில் போக்குவரத்து சிக்னல் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. இதில் கண்ணதாசன் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கண்ணதாசனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கண்ணதாசனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி தில்லைநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி தென்னுர் மீன்கார தெருவில் கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சையது இப்ராகிம் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்து மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 47). இவர் எடமலைப்பட்டிபுதூர் தண்ணீர் தொட்டி அருகாமையில் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த எடமலை பட்டிப்புதூர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த அருண் என்கிற அருள் தாஸ் ( 33 ) எடமலைப் பட்டி புதூர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கிற அந்தோணி ( 29 )ஆகிய இரண்டு ரவுடிகள் அவரிடம் பணம் கேட்ட கேட்டனர் ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ரௌடிகள் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டினர் அதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் என்கிற அருள் தாசை கைது செய்தனர். தப்பி ஓடிய ரவுடி அந்தோணியை தேடி வருகின்றனர்.