அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இறவாங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மகன் விஜயகுமார் (32) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ( தங்கை உறவுமுறை) ஆபாச வீடியோவை அனுப்பி அதில் திருமணம் செய்து கொள்வதாக பதிவு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த பதிவை பார்த்த உறவினர்கள் விஜயகுமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது .
அதை சற்றும் பொருட்படுத்தாமல் மீண்டும் அந்தப் மாணவியிடம் நீ யாரிடம் எந்த புகார் சொன்னாலும் என்றைக்கு இருந்தாலும் நீ தான் என் மனைவி என்று பதிவு போட்டதாக கூறப்படுகிறது.மேலும் அந்தப் பெண்ணை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது ,இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விஜயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.