பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரியானூர் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை ஊரல்போட்டு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ரஞ்சனா, உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வி மற்றும் அவரது குழுவினர்கள் காரியானூர் கிராமத்தில் சோதனையிட்ட போது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் , காரியானூர் கிராமம், செல்லியம்மன் கோவில் தெருச் சேர்ந்த செல்லதுரை மகன்
ரமேஷ் (31) என்பவர் வீட்டில் சுமார் 1.8 லிட்டர் நாட்டு சாராயத்தை பாக்கெட்டில் வைத்து டூவீலரில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் கையும் களவுமாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து நாட்டு சாராயத்தை விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய டூவீலரை பறிமுதல் செய்தனர். சாராயத்தை விற்பனை செய்த ரமேஷை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது போன்றுதங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட காவல் அலுவலக தொலைப்பேசி எண் 9498100690 என்ற தொலைப்பேசியினை தொடர்பு கொள்ளலாம். இரகசியம் காக்கப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.