கோவையில் ஸ்கூட்டர் மீது மோதியதற்கு சிரித்து கொண்டே மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபரை குனியமுத்தூர் காவல் துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவையைச் சேர்ந்த 20 வயது கல்லூரியில் மாணவி நேற்று முன் தினம் பாலக்காடு சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த சிறிய குழியில் இருசக்கர வாகனம் இறங்கி நிலை தடுமாறியது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் இரு சக்கர வாகனத்தின் மீது, மாணவியின் வாகனம் மோதியது. இதனையடுத்து
வாலிபரிடம் லேசாக சிரித்தபடி மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு மாணவி சென்ற நிலையில், வாலிபர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
சுமார் ஒரு கி.மீ தூரம் வரை மாணவியின் பின்புறம் சென்று மாணவியின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீடீரென மாணவியின்
கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் ,அந்த நபர் கோவை புதூர் பகுதியை சேர்ந்த முகமது ஷெரிப் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.