Skip to content

பணம் பறித்த வாலிபர் கைது… வெல்டிங் பட்டறை கேமரா உடைப்பு…. திருச்சி க்ரைம்..

  • by Authour
பணம் பறித்த வாலிபர் கைது…. திருச்சியில் முதியவர்களிடம் வழிபறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, வயலூர் சாலை, சண்முகா நகரைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (59), ஹீபர் சாலை அருகே உள்ள பெட்டி கடையில் வேலை செய்து விருகிறார். கடந்த ஏப் 20ம் தேதி இவர் கடையில் இருந்துபோது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் பணம் கேட்டுள்ளார். இவர் தர மறுக்கவே அவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்து ரூ.700ஐ பறித்துக்கொண்டு தப்பினார். இது குறித்து செஸன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதேபோல் திருச்சி மாவட்டம், லால்குடி, வைப்பூரைச் சேர்ந்தவர் முருகேசன் (52), கிராப்பட்டி, ரயில்வே குடியிருப்பு அருகே பழக்கடை நடத்தி வருகிறார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துகொண்டு தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் எ.புதுார் போலீசார் வழக்கு பதிந்து பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவைச் சேர்ந்த வல்லரசை என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருச்சியில் வாலிபர், முதியவர் மாயம். திருச்சி, திருவரங்கம், வடக்கு டையவளஞ்சான் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது60). நேற்று வீட்டில் இருந்து சென்ற இவர் மாயமானார். இது குறித்து அவரது உறிவனர் அறித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல் திருச்சி, அரியமங்கலம், அண்ணாநகர் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் (3 வயது5), பிஷப் ஹீபர் சாலையில் உள்ள தனியார் பைனாஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் கடந்த ஏப். 17ம் தேதி வேலைக்கு சென்ற இவர் வீடுதிரும்பவில்லை. அன்று இரவு அவரது மனைவியை செல்போனில் தொடர்புகொண்டு தன்னிடம் ஒருவர் பணம் பெற்றுக்கொண்டு திரும்ப தராமல் ஏமாற்றியதாகவும், அதற்காக பெங்களூர் செல்வதாகவும் கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது மனைவி ஜெர்லின் மேரி அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகையிலை விற்ற வாலிபர் கைது.  திருச்சி, நடு குஜிலித்தெரு அருகே மளிகை கடையில் புகையிலை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர் திருச்சி, நடு குஜிலித்தெரு அருகே மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சோதனை நடத்தி சின்ன செட்டி தெருவைச் சேர்ந்த சுகேல் (வயது35) என்வரது கடையிலிருந்து ரூ.2 ஆயிரத்து 400 மதிப்புள்ள 705 கிராம் புகையிலை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து நீதபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெல்டிங் பட்டறை கண்காணிப்பு கேமரா உடைப்பு… 2 வாலிபர்கள் கைது திருச்சி, தென்னூர், வாமடத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது42), அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று கடை அருகே இவர் நின்றிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். இவர் தர மருத்ததால் அவரது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்துள்ளனர். இது குறித்து மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான ராஜ்குமார் (வயது23), மாரியப்பன் (வயது21) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
error: Content is protected !!