பணம் பறித்த வாலிபர் கைது….
திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை, கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது28). மார்ச்.26ம் தேதி மேலகல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு,தாகராஜ் காலனி வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. ஆயிரம் பணத்தை இவரது பாக்கெட்டில் இருந்து பறித்துக்கொண்டு தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (வயது28) என்பவரை கைது செய்தனர்.
திருச்சியில் வாலிபருக்கு அரிவாள் விட்டு…. 2 வாலிபர்கள் கைது…
திருச்சி, காந்தி மார்க்கெட், எடத்தெரு சாலையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது45). இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த சரித்திரபதிவேடு ரவுடியான அன்சாரி (வயது26) மற்றும் சன்ஜய் (வயது23) ஆகியோருடன் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மார்ச் 26ம் தேதி முன்விரோதம் காரணமாக இந்த 2 பேரும் சரவணனை அரிவாளால் வெட்டி, கற்களால் தாக்கியுள்ளனர். காயமடைந்த இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் அன்சாரி மற்றும் சன்ஜயை கைது செய்தனர்.
திருச்சியில் மூதாட்டியை திட்டிய ரவுடி கைது…
திருச்சி, மதுரை சாலை, குப்பங்குளம், கண்ணன் ஸ்டோரைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது55), இவரது வீட்டின் அருகே சரித்திரப்பதிவேடு ரவுடியான அருள்மணி (வயது25) குடியிருந்து வருகிறார். மார்ச்.26ம் தேதி இவர் லட்சுமி வீட்டின் அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதை கேட்ட லட்சுமியை தகாத வார்த்தைககளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து அருள்மணியை கைது செய்தனர்.