Skip to content
Home » முதியவரை ஏமாற்றி 18 ஆயிரம் அபேஸ்.. வாலிபர் கைது..

முதியவரை ஏமாற்றி 18 ஆயிரம் அபேஸ்.. வாலிபர் கைது..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஏடிஎம் மூலம் தனது வங்கி கணக்கில் ரூ.20,000 பணம் செலுத்த வந்த ஒரு முதியவர் அருகிலிருந்த அடையாளம் தெரியாத வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் முதலில் இரண்டாயிரம் ரூபாய், பிறகு 18 ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கிற்கு செலுத்திவிட்டு சென்றுவிட்டார். ஆனால் ரூபாய் இரண்டாயிரம் மட்டுமே முதியவரின் கணக்கில் வரவாக இருந்தது தெரியவந்தது. ரூ.18000 வரவாகவில்லை. இதுகுறித்து முதியவர் சீர்காழி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து ரூ.18,000 செலுத்தப்பட்ட வங்கி கணக்கின் முகவரியை கொண்டு தேடி வந்தனர். திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகன் இனியன் என்பவர் சிக்கினார். அவரைபிடித்து விசாரித்தபோது, முதியவரை ஏமாற்றி தனது வங்கி கணக்கில் ரூ.18ஆயிரத்தை செலுத்தியதை ஒத்துக் கொண்டார். சீர்காழி போலீசார் இனியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இனியன் இதேபோல் பலரை ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!