நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சார்ந்த கிருத்திகா வயது 22 இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி, 2 வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு வயது குழந்தையை தாய் வீட்டில் விட்டு,விட்டு கிருத்திகா தற்போது கோவை பகுதியில் அமைந்துள்ள தனியார் மாலில் வேலை பார்த்து வந்துள்ளார் அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது கரூர் மாவட்டம், பவித்திரம் அருகே உள்ள குள்ளம்பட்டி அண்ணன் வீட்டில் இருந்து வருகிறார்.
இன்று அனைவரும் வேலைக்கு சென்ற நேரத்தில் கிருத்திகா அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிருத்திகாவை சடலமாக மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த க.பரமத்தி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணத்தில் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.