திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு ( 30. )இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. சில வருடங்களுக்கு முன்பு இறந்து விடுகிறார். இதையடுத்து மனோஜ் குமார் என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2வது திருமணம் செய்து கொள்கிறார். இதைபடுத்து கணவன்,மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2ந் தேதி கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது . இதையடுத்து சமீம் பானு மன உளைச்சலில் விரக்தி அடைந்து உடம்பில் மண்ணெண்ணயை உடம்பில் ஊற்றி தீயை பற்ற வைத்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் அவர் உடல் முழுவதும் தீ பரவி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து சமீம்பானு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை சமீம் பானு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
