புதுக்கோட்டை மாவட்டம் , ஆவுடையார்கோவில் அருகே இளையமங்கலத்தை சேர்ந்த ராஜரத்தினம் மகன் மதன்குமார் என்பவர் நேற்று காலை 7 மணி அளவில்,
கரூர் மாவட்டம், தோகைமலை சின்னரெட்டிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது, 4 இளைஞர்கள் துப்பாக்கி மற்றும் அரிவாள், கத்தி என பயங்கர ஆயுதங்களுடன் மதன்குமாரை வழிமறித்து, மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக
தோகைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தலைமையில் போலீசார் அங்கு சென்று பயங்கர ஆயுதங்களுடன் வழிபறியில் ஈடுபட்ட 4 இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்து நடத்திய விசாரணையில்,
வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் தோகைமலை அருகே உள்ள
கீழவெளியூர் காலனியை சேர்ந்த சாரதி (எ) சரத்குமார் வயது 30,
அருண்குமார் 24.,
பூபாலன் 21,
வசந்த் வயது 21. என்பது தெரியவந்தது.
இவர்களில்,
சாரதி (எ) சரத்குமார் வயது 30.
என்பவர் மீது கஞ்சா கடத்தல் என பல்வேறு வழக்குகள் உள்ளது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல் வேறு பகுதிகளில்
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இவர்கள் 4 பேரையும் கைது செய்த தோகைமலை போலீசார்
குளித்தலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.