அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தைச் சார்ந்தவர் அஜித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரை 12ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பல தொந்தரவுகளை செய்தும் நீ என்னை காதலிக்கவில்லை என்றால் செத்து விடுவேன் என மிரட்டியும் காதலித்ததாக கூறப்படுகிறது. அதனை உண்மை என நம்பி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர் பல இடங்களில் ஷர்மிளாவை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் ஷர்மிளா மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ள கேட்டபோது அதற்கு அவர் மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷர்மிளா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
