Skip to content

மின்சார ரயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு.. காரணம் என்ன?

  • by Authour

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூ.கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோனிஷா (21). இவர் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.  சம்பவத்தன்று நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்ற மோனிஷா அங்கு பானிபூரி, சுண்டல், சோளம் போன்ற பண்டங்களை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடற்கரையில் இருந்து கிளம்பிய நண்பர்கள் திருவல்லிக்கேணியில் இருந்து திருவான்மியூருக்கு மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மயிலாப்பூர் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென உடல்நல பாதிக்கப்பட்ட மோனிஷா நிலை குலைந்து கீழே உட்கார்ந்துள்ளார். தலை சுற்றி தெளிவற்ற நிலையில் இருந்த அவர் தொடர்ச்சியாக வாந்தி எடுப்பதை கண்ட நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நண்பர்களில் ஒருவர் செவிலியராக இருந்ததால் சட்டென்றுஅவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை அளித்திருக்கிறார். உடனே ரயிலில் இருந்து இறங்கிய நண்பர்கள் மோனிஷாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவரை அபரிசோதித்த மருத்துவர்கள் மோனிஷா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை கேட்டு அதிர்ந்து போயினர்.   இத சம்பவத்தில் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் கடற்கரையில் சாப்பிட்ட உணவுகளா இல்லை மாணவிக்கு வேறு ஏதேனும் பாதிப்புகள் உடலில் இருந்ததா என்பது போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையில் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!