தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், கலை ஆயம் சார்பில் நடைபெறும் இந்த விழாவை நேற்று மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். இதில், செவ்வியல் குரலிசை, பரதநாட்டியம் (தனி மற்றும் குழு) போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று சனிக்கிழமை நாட்டுப்புறப் பாடல், நாட்டுப்புற நடனம் (தனி மற்றும் குழு) நடந்து வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை நாடகப் போட்டி (தனி மற்றும் குழு) போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் ஒருவருக்கு இளந்தளிர் விருது நாளை மாலை நடைபெறும் நிறைவு விழாவில் வழங்கப்படவுள்ளது.