சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் மகேஷ் (20), வருண்குமார் (28), ரவி (23). இதில் மகேஷ் டி.வி மெக்கானிகாகவும், அருண்குமார் தனியார் செல்போன் பழுது பார்க்கும் கடையிலும் ,ரவி பிரிண்டிங் பிரஸ்சிலும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நண்பர்கள் 3 பேரும் ஈஞ்சம்பாக்கம் நஞ்சுண்டார் சாலையில் உள்ள கடற்கரைக்கு நேற்று சென்றனர். அங்கு 3 பேரும் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி 3 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.
இதில் மகேஷ் மற்றும் வருண் குமார் ஆகிய இருவரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ரவி மட்டும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
பொங்கலன்று நண்பர்களுடன் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.