Skip to content
Home » முன்விரோதம்…. கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை….

முன்விரோதம்…. கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழை மேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற பாலசுப்பிரமணியன் ( 58). விவசாயி.இவருடைய மகன் பவித்ரன்(27). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இதே கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் மகன் ஜெயமணி ( 32). இவருக்கும் உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கார்த்திக் பவித்ரனிடம் , ஜெயமணியை பற்றி விசாரித்தாக தெரிகிறது. தன்னை பற்றி பவித்ரனிடம் தான் கார்த்திக் விசாரித்து இருக்க வேண்டும் என்று எண்ணிய ஜெயமணி கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி இரவு 11 மணியளவில் பவித்ரன் வீட்டிற்கு சென்று கார்த்திக்கிடம் ஏன் எனது போன் நம்பரை கொடுத்தாய் என அவரை திட்டி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டியதில் பவித்ரன் பலத்த காயமடைந்தார். இதை தடுக்க வந்த பவித்ரனின் தந்தை பாலசுப்பிரமணியனையும் கத்தியால் தாக்கியதில், தந்தை, மகன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பவித்ரன் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து ஜெயமணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார். பின்னர் ஜெயமணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவித்ரன் சிகிச்சை பலனின்றி இன்று இறந்து விட்டார். தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, வழக்கின் பிரிவுகளை மாற்றி விசாரணை நடத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *