கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் வெற்றிச்செல்வன் இவர் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் அடிக்கடி இவரது நண்பரை பார்க்க அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரி ஒன்றில் சென்று பார்த்து வரும்பொழுது அங்கு டிப்ளமோ படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் அதிகமாகி காதலாக மாறியது. மேலும் வெற்றிச்செல்வன் அந்த பெண்ணை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்ட போது திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் இரு குடும்பத்தினரிடம் அறிவுரை கூறி இருவரும் திருமணம் செய்து கொண்டு வரும்படி கூறி அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி அப்பகுதியில் உள்ள சிறிய கோவிலில் வைத்து இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் சென்னை செல்வதாக கூறி சென்றவர் குழந்தை பிறந்தும் வரவில்லை.
மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய போது பதில் அளிக்கவில்லை. வெற்றி செல்வனுக்கு தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டு உள்ளார் இருப்பினும் கிடைக்கவில்லை. ஒரு சில முறை பேசும்போது வெற்றிச்செல்வன். தன்னிடம் பேசினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதுகுறித்து அப்பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி. வெற்றிச்செல்வன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வெற்றிச்செல்வனின் பெற்றோர்கள் உறவினர்கள் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.