மலைப் பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம் என்று தேனி ஆட்சியர் ஷஜீவனா அறிவுரை வழங்கி உள்ளார். அந்த அறிவிப்பில், “தேனி மாவட்டம் குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு, போடிமெட்டு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் மரம் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது; வாகன ஓட்டிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முடிந்த வரை இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.