தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி இருப்பவர் நடிகர்கள் யோகி பாபு. முன்னணி காமெடி நடிகராக இருக்கும் அவர், ரஜினி விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். காமெடி நடிகராக நடித்து வந்தாலும், குறைந்த பட்ஜெட் படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
அப்படி குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் யோகி பாபு நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு நாள்தோறும் தாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் யோகிபாபுவிற்கும், படத்தின் தயாரிப்பாளருக்கு இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. காலை 9 மணிக்கு படப்பிடிப்பிற்கு 11.30 மணிக்கு தான் யோகிபாபு வருவதாகவும், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து செட்டிற்கு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க உள்ளதாகவும், அதனால் யோகிபாபு ரெட் கார்ட் கொடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சில படங்களின் படப்பிடிப்பிற்கு யோகிபாபு தாமதமாக தான் வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஜெயிலர், ஜவான் உள்ளிட்ட பல படங்களில் யோகிபாபு பிஸியாக நடித்த வருவதால் சில படங்களுக்கு கால்ஷூட் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சிலர் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என யோகிபாபு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.