பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது .
இந்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் ஐந்து பேர் கொண்ட குழுவாக உடற்கல்வி ஆசிரியர்கள் முன் யோகா செய்து காட்டினர். சூர்ய நமஸ்காரம், சர்வங்காசனா, கர்ணபீடாசனா, கருடாசனா ,மயூராசனா, வட்டயாசனா, அர்தபாதபத்மோதாசனா, ஏகபாதராஜபோதாசனா ,பச்சிமோதானாசனா என பல்வேறு விதமான யோகாசனங்களை மாணவ மாணவிகள் செய்து காட்டினர்.
இந்த நிகழ்வை பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி ஆசிரியர் காளிதாசன். ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியின் முதல்வர் பிச்சைமணி, உருமு தனலட்சுமி கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சிவா, எழில். காவேரி கலைக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ஷகிலா. அன்னை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் கலா. கணேசன் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் (ஒருங்கிணைப்பாளர்). அறிஞர் அண்ணா அரசு கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சித்ரா (ஒருங்கிணைப்பாளர்) சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சுதாமதி, இந்திரா காந்தி கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் மகேஸ்வரி, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர்கள் கருப்பையா , பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை உருமு தனலட்சுமி கல்லூரியின் மாணவர்கள் முதல் இடத்தையும். ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவ. மாணவிகள் இரண்டாம் இடத்தையும். பெண்களுக்கான அணியில் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி மாணவிகள் முதல் இடத்தையும் வென்று வெற்றி கோப்பையை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பிச்சைமணி வெற்றி கோப்பையை வழங்கினார்..