திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான யோகாசன கால் இறுதிப் போட்டி தேர்வு திருச்சியில் துவங்கியது. 7வயது 13வரை 14முதல்18வரை, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் தேர்வாகும் வீரர்கள் வரும் 17, 18 சென்னையில் நடைபெறும் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்பார்கள். இறுதிப் போட்டியில் தேர்வாகும் வீரர்கள் வீராங்கனைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வருடம் நடைபெறும் தேசிய அளவிலான யோகாசன போட்டியில் பங்கேற்பார்கள்.திருச்சியில்
நடைபெற்ற போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட யோகாசனம் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன், செயலாளர் அண்ணாவி, பொருளாளர் பாக்கியலட்சுமி, துணைத் தலைவர்கள் சேதுராமன், ஹரிஹர ராமச்சந்திரன், கஜராஜன்,துணைச் செயலாளர்கள் சுதர்சன், உமாமகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர் .கரூர் திருச்சி பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.