Skip to content
Home » நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

தமிழ்நாட்டில், தற்போது  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏசி, ஏர்கூலர் போன்ற  மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மின் நுகர்வு, மார்ச் மாதத்தில் 18,100 மெகாவாட்டாகவும், ஏப்ரல் மாதத்தில் 18,500 மெகாவாட்டாகவும் இருக்கும் என மின் வாரியம் கணக்கிட்டுள்ளது. எனினும், அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக மின் நுகர்வு 18,882 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழக வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 18/4/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்களாக இருந்தது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு 13/4/2023ல், 40 கோடி யூனிட்களாக இருந்தது. மெகாவாட் அளவில், நேற்று 18/04/2023 மாநிலத்தின் மின் நுகர்வு தேவை 18,882 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு  13/4/2023ல் 18,667 MW ஆகும்.”இவ்வாறு  அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!