சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா, மலர்கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 47வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் 22ம் தேதி காலை தொடங்குகிறது. 26ம் தேதி வரை இந்த விழா நடைபெறும். இதையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் ஏற்காட்டில் நடைபெறும். இந்த ஆண்டு ஏற்காட்டில் நல்ல மழை பெய்துள்ளதால் அருமையான சீதோஷ்ணம் நிலவுகிறது. எனவே கோடைவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
