அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மூலம் சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் தானியங்கி மூலம் மஞ்சள் பை வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தினர்.
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாத வகையில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தி பொதுமக்கள் தானியங்கி இயந்திரத்தில் பத்து ரூபாய் நாணயத்தை செலுத்தினால் இயந்திரமானது மஞ்சள் பையை வழங்கும் இதனை அனைவரும் பயன்படுத்தி நெகிழி இல்லா மாவட்டமாக மாற்ற இயந்திரத்தை வழங்கி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.