27ம் தேதி முதல் 1ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. வரும் 27ம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
