Skip to content
Home » உதகை விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

உதகை விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

  • by Senthil

கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் கேக் தயாரிப்பதற்கான பழக்கலவை உருவாக்கும் விழா நடைபெற்றது.

பிரமாண்ட மேஜையில் 150 கிலோ உலர் திராட்சை, பாதம், பிஸ்தா, பேரீட்சை, வால்நட் போன்றவற்றுடன் ரம், ஒயின், பிராந்தி மதுவகைகளை ஊற்றி பட்டை, கிராம்பு, லவங்கம் உள்ளிட்ட வாசனை பொருட்களை கலந்து பழக்கலவை உருவாக்கினர். 45 முதல் 50 நாட்கள் வரை ஊறவைப்பதற்காக கலவையை ஒரு பிளாஷ்டிக் கலனில் கொட்டி மூடிவைக்கப்பட்டது.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பு கலவை வெளியே எடுக்கப்பட்டு அதனுடன் மைதா, முட்டை போன்றவற்றை சேர்த்து 160 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்பட உள்ளது. வழக்கமாக உலர் பழங்களை கொண்டு கேக் தயாரிக்கப்படும் நிலையில், உதகையில் உயர்ரக மதுபானங்களை ஊற்றி தயாரிக்கப்படுவது தனித்துவமாக உள்ளது. கேக் கலவையில் சேர்க்கப்படும் உலர் திராட்சை அழுகாமல் இருக்கவும் நறுமணம் வீசவும் மதுபானங்கள் ஊற்றப்படுகிறன்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!