Skip to content

வீர மகளே…வினேஷ் கலங்காதே…..வெள்ளிப்பதக்க மரியாதையுடன் வரவேற்பு…. அரியானா அறிவிப்பு

 பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில்,  இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 – 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று வினேஷ் போகத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை அளிக்கப்படும் என்று அரியனா  மாநில அரசு அறிவித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் போலவே வினேஷ் போகத் வரவேற்கப்படுவார்.வெள்ளிப்பதக்கம் வென்றதற்கான வெகுமதி, மரியாதை, வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் என அரியானா அரசு  அறிவித்துள்ளது.
வினேஷ் போகத்திற்கு தற்போது 30 வயது ஆகிறது. அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவரது குடும்பமே  மல்யுத்த குடும்பம்.  வினேஷ் போகத்  ஏற்கனவே உலக அளவிலான போட்டியில் பல முறை தங்கம் வென்றவர்.
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!