நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை சென்ற கார் கடற்கரையோரம் சுனாமி குடியிருப்பு அருகே நின்றது. பின்னர் காரில் இருந்த மதுபாட்டில்கள் டூவீலர் மற்றும் ஆட்டோவில் மாற்றப்பட்டது. அப்போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். கார் முன் சீட்டில் போலீஸ் சீருடையில் இருந்த பெண்ணிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருவாரூர் மாவட்டம் வைப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வரும் ரூபினி (31) என்பது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவர் அவரது கணவர் ஜெகதீஷ் (32). என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரூபிணி, ஜெகதீஷ் உட்பட 6 பேரை கைது செய்து 110 லிட்டர் சாராயம், 336 மதுபாட்டில்கள், ரூ.10 ஆயிரம், கார், ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.