Skip to content

100 நாட்கள் செயற்கை இதயத்துடன் இருந்தவர் டிஸ்சார்ஜ்…. ஆஸி., டாக்டர் சாதனை

  • by Authour

உலகிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40 வயதுடைய நபருக்கு செயற்கை முறையில் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. 100 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பி உள்ளார். செயற்கை கை, கால்களை பொருத்தி கொண்டு சர்வசாதாரணமாக நடமாடுபவர்களை பாத்திருப்போம். ஆனால் செயற்கையாக இதயத்தை பொருத்தி கொண்டு நடமாட முடியும் என்று கூறினால் அதனை யாரும் நம்பி விடமாட்டார்கள். ஆனால், அதனை சாத்தியமாக்கி உள்ளார்கள் ஆஸ்திரேலிய மருத்துவர்கள்.

நீடித்து இயங்க கூடிய செயற்கை இதயத்தை டைட்டானியத்தால் உருவாக்கி உள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவர் டேனியேல்.பிவாக்கு என பெயரிடப்பட்ட செயற்கை இதயம் ஆஸ்திரேலியாவில் இதய செயல் இழப்பால் பாதிக்கப்பட்ட 40 வயதான நபருக்கு கடந்த நவம்பர் மாதம் 6 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பொருத்தப்பட்டது. ஏற்கனவே இந்த செயற்கை இதயம் 5 பேருக்கு பொறுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர் மட்டும் செயற்கை இதயத்துடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

அவருக்கு கடந்த வாரம் மற்றொருவரின் இதயம் பொருத்தப்பட்டு குணமடைந்துள்ளார். இதன் மூலம் செயற்கை இதயத்துடன் ஒருவரை 100 நாட்கள் வரை வாழவைக்க முடியும் என்ற சாதனையை ஆஸ்திரேலிய மருத்துவர்கள் படைத்துள்ளனர். இந்த செயற்கை இதய சாதனம் 12 வயது சிறுவர்களுக்கும் பொருந்த கூடிய 650 கிராம் எடையில் உள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் உயிரிழப்பதை தடுக்கும் கருவியாக மாறி உள்ள செயற்கை இதயம் மருத்துவ உலகில் புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!