Skip to content

உலக தண்ணீர் தினம்….சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு….

  • by Authour

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 21.03.23 மாலையில் மாணவர்களிடம் விழிப்புணர்வு வாசகங்களுடன் உறுதிமொழி ஏற்றனர்.

1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22-ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடித்தான் வருகிறோமே தவிர , தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்று வரை காணப்படவில்லை.
நீர் வளத்தைக் காப்பதும் அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.இதுமட்டுமின்றி அன்றாடம்

செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.

தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும். தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும்
முடியும்.

உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி. லூயிஸ் பிரிட்டோ தலைமையில், தண்ணீர் அமைப்பின் செயல்தலைவர் திரு.கே.சி.நீலமேகம், செயலாளர் பேரா.கி.சதீஷ் குமார், இணைச் செயலர் திரு.ஆர்.கே.ராஜா, உள்ளிட்ட மூன்றாமாண்டு மற்றும் முதுகலை இசைத்துறை மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்வில் நீர்நிலைகள் பாதுகாப்பு, நிலத்தடி நீர் சுரண்டல் குறைப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர்நிலைகளை திறந்தவெளி குப்பைத் தொட்டியாய் மாற்றாமல் தடுத்துக் காத்தல், நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல், நீர் வாழ் உயிரினங்கள் பாதுகாத்தல், நிலத்தடி நீரின் மகத்துவம் போற்றுதல், மறை நீர் விழிப்புணர்வு ஆகிய பதாகைகளுடன் விழிப்புணர்வு சங்கிலி உருவாக்கப்பட்டது. என்று கூறியுடன், மாணவர்கள் மத்தியில் தண்ணீர் அவசியத்தை பற்றி பாதகை ஏந்தி விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!