Skip to content

உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்….. வெற்றிபெறும் அணிக்கு ரூ.13.25கோடி பரிசு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.  இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.  இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.31¼ கோடியாகும். இதில் மகுடம் சூடும் அணி ரூ.13¼ கோடியை பரிசாக அள்ளும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.6½ கோடி கிடைக்கும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.3¾ கோடியும், 4-வது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.2¾ கோடியும், 5-வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.1½ கோடியும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!