இன்று உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி மத்திய, மாநில அரசுகள் மூலம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவ துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.
பேரணியில், குழந்தை திருமணத்தை தடுப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், நாம் இருவர், நமக்கு ஒருவர் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, பேரணியாகச் சென்றனர். பேரணியில் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.