எலான் மஸ்க் தனது ஸ்பெஸ் எக்ஸ் ராக்கெட்டினால் உலகினை திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பிறகு தானியங்கி எலக்ட்ரிக் காரான டெஸ்லாவினை தயாரித்தார். கார் வெளியான சில நாள்களிலே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர் எல்.வி.எம். ஹச்-ன் பங்குகள் எகிறியதால் அதன் உரிமையாளரான பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்க்கைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். ஆனால் தற்போது எல்.வி.எம். ஹச்-ன் பங்குகள் 2.6 சதவிதம் சரிந்துள்ளது. அதாவது அதன் சந்தை மதிப்பு ஏறக்குறைய 10 சதவிதம் குறைந்துள்ளதாக தெரிகிறது.
இது அவரின் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பட்டத்தினைப் பாதித்துள்ளது. இதன் காரணமாக நம்பர் 2 இடத்தில் இருந்த எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார். இதனிடையில் சில மாதங்கள் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ் உலகின் பணக்காரர் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.