இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக மின்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, உலக தாய்மொழி தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கருவறையில் வளரும் போதே தாய் சொல்லித் தந்த மொழி.கைக் குழந்தையாய் தவழ்கையிலே தாலாட்டாய் கேட்ட மொழி.. இந்த மண்ணிலே நமக்கென தனி அடையாளம் தந்த மொழி.. இன்னுயிரையும் ஈந்து காக்க வேண்டிய அன்னை மொழியாம் தமிழ் மொழி வாழ்க .
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
அத்துடன் முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி , இந்நாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் தமிழ் வெல்லும், தமிழ் வாழ்க என எழுதி கையெழுத்திட்டிருப்பதையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டு வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
.