அமெரிக்காவில் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி (மிஸ் யுனிவர்ஸ் 2022) நடந்தது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் கைப்பற்றினார். இதில் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் உலக பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக போட்டியிட்டனர். வெனிசுலாவின் டயானா சில்வா இரண்டாவது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்டதிவிதா ராய், தனது ஆடையால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். அதில் அவர் ‘சோன் சிரியா’ உடையணிந்து வந்தார். தொழில்முறை மாடலான திவிதா ராய் கர்நாடகாவை சேர்ந்தவர்.
Tags:பிரபஞ்ச அழகி