சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு இண்டர்நேஷனல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் (IYSF) எனும் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக கோப்பை யோகா போட்டிக்கான வீரர்,வீராங்கனைளை தேர்வு செய்வதற்கான போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன் படி மும்பையில் நடைபெற்ற தேர்வு போட்டியில் கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, பாண்டிச்சேரி என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், தமிழ்நாட்டில் ராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் ஒண்பதாம் வகுப்பு பயின்று வரும், ஸ்ரீவில்லிபுத்தூர். கம்மாப்பட்டியைச் சேர்ந்த மாணவி ஜெ.கு. ஜெயவர்த்தனி தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்டார். கடினமான போட்டிகளிடையே இறுதி போட்டிக்கு ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெயவர்த்தனி தொடர்ந்து ,தனது அசத்தலான திறமையால், வெள்ளி பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதனால் டிசம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை யோகா போட்டிக்கான இந்திய அணியில் ஜெயவர்த்தனி இடம் பிடித்தார்.கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற போட்டியிலும் மாணவி ஜெயவர்த்தனி முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது..