டி20 உலக கோப்பை போட்டி வரும்1ம் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்த போட்டியை அமெரிக்காவும், மேற்கு இந்திய தீவும் இணைந்து நடத்துகிறது. இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 4 அணிகளுடன் மோதும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி வரும்9ம் தேதி நடக்கிறது. இந்தப்போட்டி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ஐஎஸ் ஆதரவு தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக போட்டி நடைபெறும் மைதானத்தி்ன் படத்தை பகிர்ந்து இந்த மிரட்டலை வெளியிட்டுள்ளது. இதனால் நியூயார்க் மைதானம் மற்றும் வீரர்கள் தங்கும் விடுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.