உலககோப்பை தொடரின் 21வது போட்டியில் நேற்று தர்மசாலாவில் நடைபெற்று போட்டியில் முதலில்பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 275 ரன்களை குவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்தியஅணியின் ரோகித் மற்றும் கில் கூட்டணி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இக்கூட்டணியில் கில் பொறுமை ரோகித் வழக்கம் போல் அதிரடியை கடைபிடித்தார். அணியின் ஸ்கோர் 71 ரன்கள் இருக்கும் பெர்குசன் ஓவரில் ரோகித் அவுட்டானார். ரோகித் 46 ரன்கள் எடுத்தார். அடுத்த ஐந்து ரன்கள் எடுப்பதற்குள் கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 26 ரன்களில் பெர்குசன் ஓவரில் கேட்ச் ஆனார் கில். அடுத்து இறங்கிய ஸ்ரேயாஷ் அய்யர் 6 பவுண்டரிகளை விளாசியவர், 33 ரன்களில் ட்ரென்ட் போல்ட் ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். வழக்கம் போல் அடுத்ததாக விராட் கோலி – கேஎல் ராகுல் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் திணறினர். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை தாண்டிய நிலையில் சான்டனர் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகினார் கேஎல் ராகுல். 27 ரன்களில் ராகுல் வெளியேறிய பின் வந்த சூர்யகுமார் யாதவ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அவர் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. மறுமுனையில் சிறப்பாக ஆடிய விராட் கோலி யுடன் சேர்ந்த ஜடேஜா பொறுப்புணர்ந்து விளையாடினார். இந்தப் போட்டியிலும் கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 95 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின் ஜடேஜா பவுண்டரி அடிக்க, இறுதியில் 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி இலக்கை எட்டி வெற்றிபெற்றது. நடப்பு தொடரில் இந்தியா பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும். அதேநேரம் நியூஸிலாந்து பெறும் முதல் தோல்வி இதுவாகும்.