திருச்சியில் உலக தரத்துடன் கலைஞர் நூலகம் அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கு பராட்டு தெரிவித்துள்ளார் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் அலீம்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், திருச்சி மாவட்ட நலப்பணி குழு உறுப்பினருமான டாக்டர் எம்.ஏ. அலீம் கூறியிருப்பதாவது:-
காவிரிக்கரையில் அமைந்த திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவு களஞ்சியமாக அமைந்திடும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார் .அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் திருச்சி மாநகரில் ரூ 290 கோடி மதிப்பில் 4.57 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம், அறிவுசார் மையம் கட்டப்படுவதற்கு கடந்த 21 -ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் மாணவ, மாணவிகள் பெரிதும் பயனடைவர்.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த நூலகத்தின் மூலம் பயன்பெறுவர். அறிவு சார் மையம் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சியில் உலக தரத்தில் சிறப்பான நூலகம், அறிவுசார் மையத்தை அமைப்பதற்கு பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இவ்வாறு டாக்டர் அலீம் கூறியுள்ளார்.