Skip to content
Home » மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து  சென்னையில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார். இதில்   சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,  திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் துறை உயர் அதிகாரிகள், ஊழியர்கள்  பங்கேற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும்  பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் விளக்கினர். அவற்றை கேட்ட அமைச்சர் கே. என். நேரு பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகள் தரமாக நடக்கிறதா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும் என்றும் அமைச்சர் ஆலோசனைகள் வழங்கினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!