மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு…
திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கடடடத் தொழிலாளி உயிரிழந்தார். திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (26) . இவர் சனிக்கிழமை இரவு, திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகர் 19 ஆவது குறுக்கு தெருவில் சுரேஷ் என்பவர் வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இரவு பணி முடிந்து மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்தபோது, எதிர் பாராத விதமாக அருண்குமார் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அருண்குமாரை சக பணியாளர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அருண்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில்..அடையாளம் தெரியாத 2 பேர் சாவு..
திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடப்பதாக ஏப்.11 ந்தேதி கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது .தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதே போன்று திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாலம் அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணைஇறந்த நபர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள்என்பது குறித்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பாலக்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கரை காஜாப்பேட்டை அருகே கஞ்சா விற்றதாக கீழப்புதூர் குருவிக்கார தெருவை சேர்ந்த மணிகண்டன் (25 )என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த வாலிபர் கைது
திருச்சி கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுரை ரோடு இப்ராஹிம் பார்க் அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்தாக நத்தர்ஷா பள்ளிவாசல் கோழிக்கடை சந்து பகுதியை சேர்ந்த அப்பாஸ் அலி ( வயது27 ) என்ற வாலிபரை கோட்டை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 800 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..
திருச்சி திருவரங்கம் மூல தோப்பு மலையப்பநகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது25). இவர் நேற்று மாலை திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மூன்று வாலிபர்கள் திருநாவுக்கரசிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனர்.அவர் தர மறுக்க கத்தி காட்டி மிரட்டி ரூ.1000 பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து திருவரங்கம் கண்டித் தெருவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ( வயது25 ) திருவரங்கம் கீழவாசல் கண்ணப்பன் தெருவை சேர்ந்த கிரிபாலன் (வயது20) திருவரங்கம் சாத்தரவீதி பகுதியை சேர்ந்த ரூபன் ராஜ் (வயது19)ஆகியோரை திருவரங்கம் போலீசார் கைது செய்தனர்.