Skip to content

மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை அம்பலக்கார தெருவை சேர்ந்த சந்திரசேகரன் எல்லோரின் மகன் கனகராஜ் (55). இவர் வண்ணாரப்பேட்டை நடுத்தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் மகன் தமிழரசன் (30) வீட்டில் மாமரத்தை வெட்டுவதற்கு கூலி வேலைக்காக சென்றார். மரம் வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக மரக்கிளை முறிந்து கனகராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த கனகராஜை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபகமாக உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!