Skip to content
Home » வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

வெள்ளப்பகுதியில் பணி ……தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

திருநெல்வேலி மண்டலத்தில் 173 நபர்கள், மதுரை மண்டலத்தில் 287 நபர்கள், தஞ்சாவூர் மண்டலத்தில் 185 நபர்கள், வேலூர் மண்டலத்தில் 396 நபர்கள், வேலூர் மாநகராட்சியில் 107 நபர்கள், சேலம் மண்டலத்தில் 91 நபர்கள், சேலம் மாநகராட்சியில் 220 நபர்கள், திருப்பூர் மண்டலத்தில் 225 நபர்கள், திருப்பூர் மாநகராட்சியில் 133 நபர்கள், செங்கல்பட்டு மண்டலத்தில் 4 நபர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 414 நபர்கள், ஈரோடு

மாநகராட்சியில் 113 நபர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 260 நபர்கள் என மொத்தம் 2,608 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை மாநகராட்சியின்

கடினமான இச்சூழ்நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை தமிழக முதல்வர் பாராட்டி ஊக்கத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், ஜோசப் சாமுவேல், ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *