தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது. அதாவது, இரவில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்கள் 1091, 112, 044-2345 2365, 044- 28447701 ஆகிய உதவி எண்களை அழைக்கலாம். ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்துச் செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவை இலவசம் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் ரோந்து வாகனம்… தமிழக அரசு ஏற்பாடு
- by Authour
